நாட்டில் இன்று இதுவரையான காலப்பகுதியில் 13 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் கடற்படையினர் 09 பேரும் வௌிநாட்டிலிருந்து வருகை தந்த நால்வரும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1814 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொரோனா நோயாளர்கள் 33 பேர் இன்று தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 912 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



