Astrology

மேஷராசி

இன்றைய நாளில் வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபராசி

இன்றைய நாளில் அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள் உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். மொத்தத்தில் வெற்றிக்கு வித்திடும் நாள்.

மிதுனராசி

இன்றைய நாளில் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

கடகராசி

இன்றைய நாளில் வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மராசி

இன்றைய நாளில் வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதாஎனப் பார்த்துக் கொள்ளுங்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னிராசி

இன்றைய நாளில் எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.

துலாராசி

இன்றைய நாளில் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகராசி

இன்றைய நாளில் கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய பாதை தெரியும் நாள்.

தனுசுராசி

இன்றைய நாளில் சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறைகுறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மகரராசி

இன்றைய நாளில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பராசி

இன்றைய நாளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

மீனராசி

இன்றைய நாளில் ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சிலதந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here