அமெரிக்காவுடன் MCC ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது தொடர்பாக நாட்டில் கடும் எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன.
இலங்கை MCC உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. எனினும், நேபாளம் 2017 ஆம் ஆண்டு MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டாலும் பாராளுமன்றம் அதனை அனுமதிக்கக்கூடாது என அதற்கு எதிராகப் போராடி வரும் நேபாள மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பாராளுமன்றம் அதனை அனுமதித்தால் நாட்டின் தேசிய தேவைகள் மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என நேபாள மக்கள் கூறுகின்றனர்.
நேபாளத்தில் மின்சக்தி பிரிவினை வலுப்படுத்தல், வலயத் தொடர்புகளை மேம்படுத்தல், போக்குவரத்துச் செலவுகளை நிர்வகித்தல் மற்றும் தனியார் முதலீடுகளையும் வேலைவாய்ப்பையும் ஊக்குவித்தல் போன்ற எதிர்பார்ப்புகளுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் நேபாள அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளது.
MCC நிறுவனம் தெற்காசியாவில் முதலாவதாக நேபாளத்துடனேயே ஒப்பந்தமிட்டது.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி அப்போதைய நேபாள நிதியமைச்சரும் அமெரிக்க தூதுவரும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இலங்கைக்கான தற்போதைய அமெரிக்கத் தூதுவர் Alaina B. Teplitz, அன்று நேபாளத்திற்கான தூதுவராக இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் இருந்தார்.
இந்த ஒப்பந்தத்தில் கைச்சாதிடுவது தொடர்பாக நேபாளத்தின் ஆட்சியிலிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கிடையில் பிரிவு ஏற்பட்டிருந்தது.
தற்போது அதற்கு மக்களின் எதிர்ப்பும் எழுந்துள்ளது.அமெரிக்காவின் மறைக்கப்பட்ட சூழ்ச்சி அதிகாரத்தை நேபாளத்தின் மீது சுமத்த முயற்சிப்பதாக ஆட்சியிலிருக்கும் கட்சியின் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
MCC ஒப்பந்தத்தை அனுமதிப்பது தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இன்று கூட்டம் நடத்தவுள்ளது.



