வடக்கு தாய்லாந்தில் புகிங்காங் மடத்தில் மடாதிபதியாக இருப்பவர் 68 வயதான தம்மகோர்ன் வாங்க்பிரீச்சா.
மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை பெற தன் தலையை வெட்டி புத்தருக்கு காணிக்கையாக வைப்பது பலனை தரும் என்று அவர் நம்பினார்.
இது புத்த மதத்தில் தகுதி பெறுதல் என்று அறியப்பட்ட ஒரு நம்பிக்கை. தனது தலையை வெட்டுவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக காத்திருந்து உள்ளார் வாங்க்பிரீச்சா.
இதுகுறித்து அவர் கடைசியாக எழுதியுள்ள கடிதத்தில், ‘தன்னுடைய மறுவாழ்வு காலத்தில் முதன்மை துறவியாக பிறப்பதற்கு புத்தர் ஆசி வழங்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இவரது மறைவை அடுத்து 300-க்கும் மேற்பட்ட புத்த துறவிகள் இவரது இறுதி சடங்கை யாருக்கும் தெரியாமல் செய்ய ஆரம்பித்தனர்.
ஆனால், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு புத்த மதத்தின் தேசிய அலுவலகம், இதுபோன்ற நடைமுறைகள் எதையும் ஊக்குவிக்கக் கூடாது மக்களிடம் விழிப்புணர்வை பரப்ப உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.



