தலங்கம -ஹீனடிகும்புர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடம் இருந்து 500 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த பெண் 33 வயதுடைய நோனாகம பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
கைது செய்யப்பட்ட நபர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞராவார்.
குறித்த இருவரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் கலு சாகர மற்றும் முது என்ற பெண் இந்த போதைப்பொருள் வியாபாரத்தை வழிநடத்தி செல்வதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்



