கொரோனா தொற்றுக்குள்ளான சிறார்களுக்கு ஏற்படும் MIS – C என்ற நோய் காரணமாக, கொழும்பு – ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு முழுவதுமான சிறுவர் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் நலின் கித்துல்வத்த தெரிவிக்கின்றார்.

இந்த நோய் தொற்றுக்குள்ளான சுமார் 45 சிறார்கள், கொழும்பு – ரிஜ்வே ஆர்யா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள சிறார்களில், நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நோயானது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகி வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.

கொவிட் தொற்றுக்குள்ளான சிறார்களுக்கு இரண்டு முதல் 6 வாரங்களில் இந்த புதிய வகை நோய் தொற்று ஏற்படுவதாக அவர் கூறுகின்றார்.

சிறார்களின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது, வேறு உறுப்புக்களுக்கு தாக்கத்தை செலுத்துவதன் ஊடாக இந்த நோய் ஏற்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு ஏற்படும் நோயானது, இருதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதனால், சிறார்களை பெற்றோர் மிகவும் அவதானத்துடன் பார்த்துக்கொள்ளுமாறு கொழும்பு – ரிஜ்வே ஆர்யா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் நலின் கித்துல்வத்த கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here