அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதென நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

புதிய விலை விபரங்கள்

01.சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 250 ரூபா
02.சீனி ஒரு கிலோகிராம் 215 ரூபா
03.உருளை கிழங்கு (இலங்கை) ஒரு கிலோகிராம் 300 ரூபா
04.உருளை கிழங்கு (இந்தியா) ஒரு கிலோகிராம் 240 ரூபா
05.பெரிய வெங்காயம் (வெளிநாடு) ஒரு கிலோகிராம் 135 ரூபா
06. சிவப்பு பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 400 ரூபா

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சதொச மொத்த விற்பனை நிலையத்தில் 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை, தற்போது 120 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்புவின் விலை 250 ரூபா வரை அதிகரித்துள்ளது.

எதிர்வரும் ஓரிரு தினங்களில் சதொசவிற்கு வெள்ளை சீனி கிடைக்கும் எனவும், அதன் பின்னர் சீனியின் விலை குறைவடையும் எனவும் சதொச மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர் ஓய்வூ பெற்ற ரியல் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here