இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்  09வது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று காலை ஆரம்பமானது. 
223 உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இன்றைய பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் ஆரம்பத்தில் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார். இதனை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார். 

இதனால் புதிய சபாநாயகர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.  
அரவது பெயரை மஹிந்த அமரவீர முன்மொழிந்தார். 

வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். 
இதேவேளை ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடமையினை பொறுப்பேற்றார். 

அத்துடன் அங்கஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். 
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here