சார்வரி வருடம் புரட்டாசி 05 ஆம் நாள் செப்டம்பர் 21, 2020 திங்கட் கிழமை. பஞ்சமி திதி இரவு 11.42 மணிவரை அதன் பின் சஷ்டி திதி இரவு 11.42 மணிவரை, விசாகம் நட்சத்திரம் இரவு 08.48 மணி வரை அதன் பின் அதன் பின் அனுசம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் துலாம் ராசியிலும் விருச்சிகம் ராசியிலும் பயணம் செய்வதால் மீனம் ராசிக்காரர்களுக்கும் மேஷம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும் பேச்சில் நிதானம் தேவை. சந்திரன் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்று இன்றைய ராசி பலனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
சந்திரன் உங்க ராசிக்கு பிற்பகலுக்கு மேல் சாதகமாக இல்லை. இன்று உங்கள் ராசிக்கு பிற்பகல் 03.16 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. முக இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் நோய் தொற்றுள்ள பகுதிகளல் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு சாதகமாக இருக்கிறார். ஏழாம் வீட்டிற்கு வருவதால் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சந்திரன் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள்.
மிதுனம்
சந்திரன் உங்க ராசிக்கு சாதகமாக இருக்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெலவுகள் உண்டாகும். வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
கடகம்
சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டிலும் ஐந்தாம் வீட்டிலும் பயணம் செய்வதால் உற்சாகம் அதிகரிக்கும் வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகள் மூலம் சில தொல்லைகள் வரலாம் கவனமாக இருக்கவும். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
சிம்மம்
சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயம் செய்கிறார். பிற்பகலுக்கு மேல் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.
கன்னி
சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு பயணிப்பதால் குடும்பத்தில் இன்று மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மன அமைதி ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
துலாம்
சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பிற்பகலுக்கு மேல் இடம்மாறுகிறார். இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்சாகம் அதிகரிக்கும் குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சந்திரன் பிற்பகல் வரை விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பிற்பகலுக்கு சந்திரன் உங்க ராசிக்கு இடம் மாறுவதால் குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
தனுசு
சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணிப்பதால் இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்
சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணிக்கிறார். இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
சந்திரன் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் பத்தாம் வீட்டில் பயணிக்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டும். திடீர் பணவரவுகள் உண்டாகும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.
மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பிற்பகல் வரை சாதகமாக இல்லை. உங்கள் ராசிக்கு பிற்பகல் 03.16 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மதியத்திற்கு பிறகு ஒன்பதாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்.

