இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் மரணம் என்பது உறுதியானது. அதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை.
ஆனால் நாம் இறக்க போவதை சில மாதங்களுக்கு முன்பே தெரிந்து கொள்ளலாம் என்று புராண நூல்கள் சில குறிப்புகளாக கூறுகின்றன.
இது எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை. ஆனால் இது மிகவும் சுவாரஸ்யமானது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாம் காதை மூடிக் கொள்ளும் போது ஒரு வித சத்தம் கேட்கும். அப்படி இல்லாமல் காதை மூடும் பொழுது எந்த சத்தமும் கேட்காமல் இருந்தால் விரைவில் மரணம் ஏற்பட போவதாக அர்த்தம்.
குளித்ததும் நம்முடைய உடல் உடனே காய்ந்தாலும் தண்ணீர் குடிக்கும் பொழுது உடனே நாக்கு உலர்ந்து போனாலும் நமக்கு பத்து நாட்களில் நாம் இறந்து விடுவதாக அர்த்தம்.
நம் உடலில் திடீரென பிணத்தின் நாற்றம் ஏற்பட்டால் பதினைந்து நாட்களில் நாம் இறந்து விடுவதாக அர்த்தம்.
நீரில் நம்மை பார்க்கும் பொழுது அதில் முகம் தெரியவில்லை என்றால் ஒரே மாதத்தில் நாம் இறந்து விடுவோம் என்று அர்த்தம். மேலும் கண்ணாடியில் தலையில்லாத பிம்பம் தெரிந்தால் ஒரே மாதத்தில் மரணம் ஏற்படும்.
நிஜத்தில் அல்லது நம்முடைய கனவில் வானில் மேகம் இல்லாமல் மின்னல் தோன்றியதை நாம் பார்த்தாலும், இரவு நேரத்தில் வானவில் திடீரென வந்தாலும் மூன்று மாதத்திற்குள் நாம் இறந்து விடுவதாக அர்த்தம்.
நாம் வெயிலில் நின்றால் நிழல் தெரியும். நம்முடைய நிழல் நம்மை போன்று இல்லாமல், வேறு மாதிரி திடீரென தெரிந்தால் 4 மாதத்திற்குள் மரணம் சம்பவிக்குமாம்.
காகம் அல்லது குருவி போன்றவை நம்முடைய தலை மேல் விழுந்தால் அல்லது கனவில் வந்தால் 5 மாதத்திற்குள் மரணம் சம்பவிக்குமாம்.
சாதரணமாகவோ அல்லது கனவிலோ தலையில் காகம், கழுகு இவற்றில் ஏதேனும் ஒன்று வந்து இருப்பது போன்று தோன்றினாலும், நிஜமாகவே அமர்ந்தாலும் 6 மாதத்திற்குள் மரணம் ஏற்படுமாம்.
கனவில் அல்லது நாம் சாதரணமாக இருக்கும் போது நம்முடைய கால் சேற்றில் அகப்பட்டு பாதி அளவு கால் வெளியே தெரியுமாறு தெரிந்தால் அந்த நாளிலிருந்து ஏழு மாதத்திற்குள் நாம் இறந்து விடுவதாக அர்த்தம்.
அதிக எடையுடன் இருப்பவர்கள் திடீரென சில நாட்களில் மெலிந்து விட்டாலும், ஒல்லியாக இருப்பவர்கள் திடீரென சில தினங்களில் குண்டாக மாறிவிட்டாலும் 8 மாதத்தில் மரணம் ஏற்படுமாம்.
நம்முடைய கனவில் பூதம், பிணம், தங்கம் போன்று அழகாக இருக்கும் மரங்கள் அல்லது நாம் பிறரிடம் உதவி கேட்பது போன்றோ தெரிந்தால் சரியாக 9 மாதத்தில் மரணம் ஏற்படுமாம்.
மல ஜலங்கள் நம்முடைய கனவில் தங்கங்கள் போன்று பார்க்க நேர்ந்து விட்டால் 10 மாதத்திற்குள் மரணம் சம்பவிக்குமாம்.
வானில் வேறு எந்த கிரகங்களும் இல்லாமல் தனியாக சூரியன் மட்டும் தெரிந்தால் அல்லது கிரகணம் இல்லாமல் சூரிய கிரகணம் போல் தெரிந்தால் அந்த நாளிலிருந்து பதினொன்று மாதத்திற்குள் மரணம் சம்பவிக்குமாம் .
வானில் துருவ நட்சத்திரமும், சுக்கிரனும் நம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பொழுது அதிலிருந்து ஒரு வருடத்திற்குள் மரணம் ஏற்படுமாம்.
மேற்கூறிய அனைத்தையும் நாம் கவனித்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவைகள் ஒருவருக்கு எப்போதும் நிகழ்வதில்லை. இந்த விஷயங்கள் சிலவேளை நடக்காமல் கூட இருக்கலாம். ஒருவேளை இந்த அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால் கவனமாக இருங்கள்.

