சார்வரி வருடம் புரட்டாசி 11 ஆம் நாள் செப்டம்பர் 27, 2020 ஞாயிறுகிழமை. ஏகாதசி திதி இரவு 07.47 மணிவரை அதன் பின் துவாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 08.49 மணி வரை அதன் பின் அவிட்டம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இன்று புரட்டாசி ஏகாதசி திருவோணம் என்பதால் பெருமாளை வணங்க நல்ல நாள்.

மேஷம்

சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு அற்புதமான நாள். சகோதரர்களின் உதவி தேடி வரும். மனதிலும் உடலிலும் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். வீட்டில் இன்று சுப காரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும் வருமானம் அதிகமாகும்.

ரிஷபம்

சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். மனரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் வரலாம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மிதுனம்

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உணவு விசயத்தில் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கடகம்

சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.

சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

கன்னி

சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை.

துலாம்

சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்களை அனுசரித்து செல்லுங்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் லாபம் பெருகும். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். உற்சாகமான நாள் உறவினர்களுடன் கூடி மகிழ்வீர்கள்.

தனுசு

சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும். உறவினர்களின் உதவி தேடி வரும்

மகரம்

சந்திரன் உங்க ராசிக்குள் பயணம் செய்கிறார். குரு மங்கள யோகம், புனர்பூ தோஷம் என இரண்டுமே இணைந்துள்ளது. இன்று உங்களுடைய குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகமாகும். நினைத்த காரியம் வெற்றியில் முடியும்.

கும்பம்

சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திடீர் விரைய செலவுகள் வரலாம் கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக பேசவும். பண வரவுக்கு ஏற்ப செலவுகள் வரும். திடீர் வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். வியாபாரத்தில் சிறிய தடைக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். வியாபாத்தில் லாபம் அதிகரிக்கும் வருமானம் பெருகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here