சார்வரி வருடம் புரட்டாசி 13 ஆம் நாள் செப்டம்பர் 29, 2020 செவ்வாய்கிழமை. திரயோதசி திதி இரவு 10.33 மணிவரை அதன் பின் சதுர்த்தசி திதி. சதயம் நட்சத்திரம் இரவு 12.48 மணி வரை அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கும்பம் ராசியில் பயணிக்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்களால் நன்மை நடைபெறும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வேலை விசயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். இன்றைக்கு மகிழ்ச்சிகரமான நாள்.
ரிஷபம்
சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார். உங்களுக்கு இன்றைக்கு தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வீட்டில் பெரியவர்களின் பேச்சுக்களை கேட்டு நடக்கவும்.
கடகம்
சந்திரன் இன்றைக்கு உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் அலைச்சல் அதிகமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வீண் வம்பு வழக்குகளில் ஈடுபடாதீங்க. வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும்
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். கடன்கள் குறையும். அலுவலகத்தில் வேலை விசயமாக ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். இன்று உற்சாகம் அதிகமாகும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். வீட்டில் பிரச்சினைகள் குறையும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்களுக்கு சுகமான நாள். உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களுக்கு இருந்த பொருளாதார பிரச்சினைகள் தீரும். வருமானம் இரட்டிப்பாகும். நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள்.
மகரம்
சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வருமானம் இன்றைக்கு பல வழிகளிலும் வரும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். உங்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும்.
கும்பம்
உங்க ராசிக்குள் இன்று சந்திரன் சஞ்சரிக்கிறார். உங்க திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்படும். நண்பர்களை சந்திப்பீர்கள். இன்று உங்களுக்கு சந்தோஷம் அதிகமாகும். உங்க உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் உங்களுக்கு பண வருமானம் கிடைக்கும்.
மீனம்
உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இன்று சந்திரன் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு பண வருமானம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.

