சார்வரி வருடம் புரட்டாசி 14 ஆம் நாள் செப்டம்பர் 30, 2020 புதன்கிழமை. சதுர்த்தசி திதி இரவு 12.26 மணிவரை அதன் பின் பௌர்ணமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 03.15 மணி வரை அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கும்பம் ராசியில் இரவு வரை பயணம் செய்வதால் கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது கவனமும் எச்சரிக்கையும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் உங்க ராசி லாப ஸ்தானத்திலும் இரவுக்கு மேல் விரைய ஸ்தானத்திற்கும் மாறுகிறார். இன்று உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். கூடவே செலவுகள் வரலாம். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விசயத்திலும் கவனம் காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

ரிஷபம்

சந்திரனால் உங்களுடைய வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் நன்மைகள் நடைபெறும்.


மிதுனம்

சந்திரன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பேசும் போது கவனமாக பேசாவிட்டால் தவறாக புரிந்து கொள்ளப்படும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் இருந்த பணிச்சுமை குறையும். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். ஆலய வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

கடகம்

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு இரவு வரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது. இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம்.


சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் கல்விக்காக வங்கி கடன் முயற்சி செய்யலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். கொடுத்த கடன் மீண்டும் கைக்கு வந்து சேரும். இன்று உங்கள் ராசிக்கு இரவுக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.

கன்னி

சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

துலாம்

சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றத்துடன் கூடிய உயர்வுகள் கிடைக்கும். மாலைக்கு மேல் மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

விருச்சிகம்

சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

தனுசு

சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் சேமிப்பில் இருந்த பணத்தை உங்களின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யுங்கள். இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிடைக்கும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சுப முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

மகரம்

சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெண்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. இன்று உங்களுக்கு உடல்நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் நன்மைகள் நடைபெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

கும்பம்

சந்திரன் உங்க ராசிக்குள் இரவு வரை பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும் என்றாலும் திடீர் செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

மீனம்

சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் இரவுக்கு மேல் உங்க ராசிக்கு வருகிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவு விசயத்தில் எச்சரிக்கை அவசியம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here