ஸ்ரீ லங்கன் விமான சேவை தமது இரண்டாவது மீட்பு நடவடிக்கைக்காக ஜப்பான் வரை விமானங்களை இயக்கியுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட விமான பயணங்களை மேற்கொள்வதற்கு அமைய நேற்று இரவு 07.20 அளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.454 இலக்க விமானம் ஜப்பானின் நரிடா நகரை நோக்கி பயணித்துள்ளது.

இந்த விமானத்தில் 157 பயணிகள் வரை பயணித்துள்ளதுடன், அதில் 16 பேர் ஜப்பானியர்களாவர்.

ஏனையோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்த 141 வெளிநாட்டவர்களாவர்.

இதில் பயணித்த 16 ஜப்பானியர்களும் நேற்று பிற்பகல் மாலைத்தீவில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் லண்டன் நகரங்களுக்குமாக விமான சேவைகளை ஸ்ரீலங்கன் விமான சேவை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here