வவுனியா வேப்பங்குளம், 6ம் ஒழுங்கைக்கு அருகில் உள்ள பகுதியில் வீடு ஒன்றிலிருந்து இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞனை, காலைப் பொழுதில் தாயார் எழுப்பிய போது இளைஞன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் அயலவர்களால் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸார் இளைஞரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
27 வயதுடைய ராஜேந்திரன் விமலராஜ் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



