“இராவணன் இராஜ்ஜியம் எனக் கூறப்படுவதெல்லாம் கற்பனைக் கதையாகும்.

இராவணன் வாழ்ந்தற்கான எந்தவொரு தொல்லியல் சான்றுகளும் கிடைக்கவில்லை” என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: “இராவணன் சம்பந்தப்பட்ட விடயம் நம் நாட்டில் திணிக்கப்பட்ட ஒன்றாகும். எனவே தவறானதொரு இதிகாசத்தை சமூகமயப்படுத்த முடியாது.

அதனால் தான் இராவணன் சம்பந்தப்பட்ட விடயத்தை நிராகரிக்கிறேன். அதற்கு பல காரணங்களும் உள்ளன. இராமாயணம் என்பது வீரகாவியமாகும்.

சினிமாப் படங்களில் எப்படி கதாநாயகன் தனி ஒருவனாக நூறு பேரை அடிப்பானோ, அது போன்றே இராவணனின் தோற்றமும் காண்பிக்கப்படுகிறது.

இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இருதடவை இராமர் யுத்தத்தை நிராகரித்தார். அனுமான் பாலம் அமைத்து வந்தார் என்றும், இராவணனிடம் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் போன்ற சாதனங்கள் இருந்தன என்றும் இராவணன் கிரகங்களைக் கூட பிடித்தார் எனவும் நம்பப்படுகிறது.

அவரிடம் இவ்வளவு பலம் இருந்தும், அனுமான் பாலம் கட்டும்போதோ அல்லது வாலால் தீ மூட்டும் போதோ, ஏன் இராவணனால் தடுக்க முடியாமல் போனது?

நாட்டிலுள்ள தொல்பொருட்கள் பலவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இருந்தும் இராவணன் சம்பந்தப்பட்ட எந்த ஆதாரங்களும் எமக்கு கிடைக்கவில்லை.

குறிப்பாக இராவணனின் இடங்கள் என்று சொல்லப்படும் இடங்களில் கூட எங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நாட்டில் நிறைய பேர் கிணறு வெட்டுகின்றனர். விவசாயம் செய்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு கூட இன்னும் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லையே” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here