இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1140ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 1138பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டார்.
இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 457 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 674 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



