மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, பிரஜா சக்தி அமைப்பின் கீழ், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரஜா சக்தி அமைப்பின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இதன்படி, வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது.

0715550666 மற்றும் 0512222422 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புக்கொண்டு, வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்க முடியும் என பாரத் அருள்சாமி தெரிவிக்கின்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here