அளுத்கம காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தி மற்றும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்காக அளுத்கம மொரகல பகுதியிலுள்ள வீடொன்றிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.

நீதிமன்ற உத்தரவை செயற்படுத்துவதற்காக நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இதன்போது அவர்களது செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக காவல்துறை பொறுப்பதிகாரி அங்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் இருந்த சிலர் இவ்வாறு முறையற்ற விதத்தில் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here