தாம் பாராளுமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முன்னாள் பிரதி அமைச்சராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவுக்கு தண்டனை வழங்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கருணா அம்மான் இராணுவ சிப்பாய்களைக் கொன்றதாக கூறிய கருத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது ஆட்சியின் கீழ் எவ்வாறாயினும் அவருக்கு தண்டனை வழங்க நடவடிக்கையெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி தேர்தலில் வெற்றிப் பெற்ற பின்னர் வீடமைப்பு அமைச்சை பிரதமரின் கீழ் கொண்டு வந்து வீட்டு பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான வரலாற்று புரட்சியை ஏற்படுத்துவேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here