விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் மீது யுத்த குற்றம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன்னாள் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் அநுர மத்தேகொடதெரிவித்துள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் விரைவாக முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும் அநுர மத்தேகொட வலியுறுத்தியுள்ளார்.

யுத்தத்தில் ஏற்பட்ட மேலதிக பாதிப்புகள் குற்றங்களாகக் கருதப்படுவதில்லை என்றாலும், அவரால் கொல்லப்பட்ட பிக்குகளினுடைய கொலைச் சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் என அநுர மத்தேகொட தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அநுர மத்தேகொட மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here