மேஷராசி

இன்றைய நாளில் குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபராசி

இன்றைய நாளில் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்து கொடுத்து போங்கள்.சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மிதுனராசி

இன்றைய நாளில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நன்மை கிட்டும் நாள்.

கடகராசி

இன்றைய நாளில் அரசால் அனுகூலம் உண்டு.பேச்சால் பல பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம்கிட்டும் நாள்.

சிம்மராசி

இன்றைய நாளில் உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. கனவு பலிதமாகும் நாள்.

கன்னிராசி

இன்றைய நாளில் தாயாருடன் விவாதம் வந்து போகும். தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். போராடி வெல்லும் நாள்.

துலாராசி

இன்றைய நாளில் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகராசி

இன்றைய நாளில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

தனுசுராசி

இன்றைய நாளில் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

மகரராசி

இன்றைய நாளில் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க வேண்டிவரும். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பராசி

இன்றைய நாளில் அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். மதிப்பு கூடும் நாள்.

மீனராசி

இன்றைய நாளில் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here