யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியிலுள்ள வீடொன்றில் அடையாளம் தெரியாத மர்ம கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதல் நேற்றிரவு இடம்பெறுள்ளது.

குறித்த வீட்டிற்கு வருகைத் தந்த குழுவொன்று, வீட்டின் யன்னல்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சேதப்படுத்தி,வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்கள், பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் வருகைத் தந்துள்ளனர்.

எனினும்,தாக்குதல் நடத்திய குறித்த கும்பல்,அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here