கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருந்த பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த 5ம் திகதி கொரோனா அறிகுறி காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் நேற்று இரவு முதல் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here