வீரகெடிய – கஜநாயக்ககம பகுதியில் 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (19) இரவு 10.00 மணியளவில் குடும்பத் தகராறின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அந்தக் சிறுவன் பலத்த காயங்களுடன் வீரகெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பின்னர் தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்பது இன்னும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here