சில நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் சுயமானவே மூடப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் பொருள் கொள்வனவுகளுக்காக வேறு நகரங்களுக்கு செல்வார்களாயின், அந்த திட்டத்தின் எந்தவித பயனும் கிடையாது என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

வர்த்தக நிலைய உரிமையாளர்கள் இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடி, செயற்படுகின்றமையை, தாம் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த திட்டம் சாதாரண மக்களை பாதிக்காத வகையில், முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல்வேறு பகுதிகளில் சிறு வியாபார நடவடிக்கைகளின் ஊடாக, வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் மக்கள் குறித்தும், சிந்தித்து செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால், மக்களை சிரமத்திற்கு உட்படுத்தாது, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here