சங்கமன்கந்தையில் இருந்து 38 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் குவைத்திலிருந்து இந்தியா நோக்கி பயணித்த எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பனமா நாட்டுக்கு சொந்தமான கப்பலில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அதில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, மூன்று கப்பல்கள் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.



