இலங்கையில் நேற்று நடைபெற்ற 9 ஆவது பாராளுமன்றத்தின் முதல் நாளில் கலந்து கொண்ட மைத்ரிபால சிறிசேன, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பாராளுமன்ற லொபியை விட்டு வெளியேறினார்.

மைத்திரிக்கு வழங்கப்பட வேண்டிய பதவி குறித்து ஊடகவியலாளர்கள் விசாரித்த போதிலும், அவர்களுக்கு எவ்வித பதிலும் வழங்காமல் சென்று மைத்திரி தனது தலை முடியைச் சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அமைச்சரவை பதவி பிரமாணத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரி எவ்வித பதவியும் கிடைக்காமையினால் தனது சமூகவலைத் தளங்களில் அவர் வெளியிட்ட பதிவு பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டது.

“கடினமான சவாலை வெற்றிகரமாக வெற்றியீட்டிய பின்னர் அதன்கான பதில் கிடைக்கும் அமைதியான சில காலங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்” என மைத்திரி தனது பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here