2020 டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வெற்றிக் கொண்டு, உலக சாதனை நிலைநாட்டிய தினேஷ் பிரியந்தவிற்கு ஐந்து கோடி ரூபா பரிசுத் தொகையை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தடவையாக தங்கப் பதக்கம் இந்த முறை கிடைத்திருந்தது.

அத்துடன், தினேஷ் பிரியந்தவிற்கு பயிற்சிகளை வழங்கிய பிரதீப் நிஷாந்தவிற்கு 165 லட்சம் ரூபாவை வழங்கவும் விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வெற்றிக் கொண்ட துலான் கொடித்துவக்குவிற்கு 2 கோடி ரூபா பரிசுத் தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here