இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள சூழ்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம், கல்வி அமைச்சு வினவியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
அவ் ஆலோசனைகளின் அடிப்படையில் பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவத்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடுமாறு கல்வி அமைச்சுக்கு சுகாதார அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக இலங்கையின் பிரபல ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரொர் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



