நாவுல, எலஹெர வீதியில் உள்ள பகமுனா பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை கொண்டு சென்ற நான்கு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் வெடிபொருட்களை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றபோது பொலிஸார் முன்னெடுத்த அதிரடி சோதனையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.
இதில் 3 கிலோ 230 கிராம் அமோனியா, 135 கிராம் நீர் ஜெல், 20 கிராம் துப்பாக்கி தூள், 14 டெட்டனோட்டர் தொப்பிகள், கம்பி சுருள்கள் உட்பட மற்றும் பல பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவிசாவளையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று உலகளவில் ஈஸ்டர் ஞாயிறு பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று பாரிய தீவிரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து இன்று நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாரியளவிலான வெடிமருந்துகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமா? என சந்தேகம் எழுந்ததுடன், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



