இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவின் கழிவுகள் அனைத்தும், வைத்தியசாலை வளாகத்தில் குவிந்துள்ளமை பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கழிவுப் பொருட்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இவ்வாறு அப்புறப்படுத்தாது, குவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைக்கு வருகைத் தருவோர் தெரிவித்துள்ளனர்.
இதனால், தாம் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் கவலை வெளியிடுகின்றனர்.
இவ்வாறு குவிக்கப்பட்டுள்ள கழிவுகள் நீருடன் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமையினால், விரைவில் இந்த கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்



