கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவல் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய வகையிலான அத்தியவசிய சேவைகளை அறிவித்த பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆணையை, 10 ஆளுநர்கள் எதிர்த்துள்ளனர்.
உலக நாடுகளில் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் பிரேஸில் ஜனாதிபதி, உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் முடி திருத்துமிடங்களை திறந்த நிலையில் இருக்கக்கூடிய அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தார்.
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற நிலையில், பிரேஸில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது உலக நாடுகள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
வைரஸ் தொற்று பரவும் முக்கிய இடங்களாக, சுகாதார அதிகாரிகளால் பெயரிடப்பட்டுள்ள குறித்த இடங்களை அத்தியவசிய சேவைகள் பட்டியலில் இணைத்தது குறித்து, பலரும் தங்களது கண்டனங்களை வெளியிட்டனர்.
இந்தநிலையில், தற்போது போல்சனாரோவின் ஆணைக்கு இணங்க மாட்டேன் என குறைந்தது 10 ஆளுநர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து ரியோ டி ஜெனிரோ ஆளுநர் வில்சன் விட்ஸல் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “போல்சனாரோ செங்குத்துப்பாதையை நோக்கி நடந்து வருகிறார், நம் அனைவரையும் அவருடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார்” என பதிவிட்டுள்ளார்.