மஹியங்கனை – மொரகெடிய பிரதேசத்தில் நேற்று (12) கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர், பலத்த காயங்களுடன் தம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், மொரகெட்டிய வேவெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரிடையேயான வாக்குவாதம் முற்றி, கைகலப்பானதில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்யும் பொருட்டு மஹியங்கனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here