அண்மையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் மாதிரிகளை பெற்று சோதனையொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, அரிசி மா, கோதுமை மா, பருப்பு, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தரமானதாக காணப்பட்ட நிலையில், மஞ்சள் தூள் மாத்திரம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
சில இடங்களில் மஞ்சள் தூளில் இரசாயன பொருட்கள் மற்றும் நிறமிகளும் பயன்படுத்தப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சமகாலத்தில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூள் மனித பாவனைக்கு பொருத்தமானது அல்லவென நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், மஞ்சள் தூள் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சபை எச்சரித்துள்ளது.



