முன்னாள் வானொலி தமிழ் அறிவிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான M.பரணிதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.

பொரள்ளை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tocilizumab என்ற மருந்து வகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, விற்பனை செய்யும் நோக்குடன் தனது வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மருந்து வகையை இந்தியாவிலிருந்து கொண்டு வந்து தர முடியும் என  அரசியல்வாதியான M.பரணிதரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

தாம் அன்டீஜன் வர்த்தகத்தை செய்யவில்லை எனவும் அவர் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here