கொரோனா வைரஸால் தென்கொரியாவில் சிக்கியிருந்த 262 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் அவர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் தென்கொரியாவுக்கு தொழிநிமித்தம் சென்றிருந்தவர்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.எல் – 471 விமானத்தின் ஊடாக இன்று (02) பிற்பகல் 3.55 மணியளவில் அவர்கள் நாட்டை வந்டைந்துள்ளனர்.

அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here