ஹசலக – மொரயாய பகுதியில் உள்ள வீட்டில் 35 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பிற்கு இணங்க முன்னெடுக்கப்பட்ட சோதனையில், தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நபர் ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாத்தளை – உக்குவளை பகுதியைச் சேர்ந்தவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here