சங்கிலிய மன்னனின் 401 வது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள சங்கிலிய மன்னனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து யமுனா ஏரியிலும் மலர்தூவி வழிபாடு நடாத்தப்பட்டது.
இந் நிகழ்விலே யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் திரு.ஈசன், இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான். S.பாலச்சந்திரன் மற்றும் பல பிரமுகர்கள் பங்குபற்றினர்.
இந்நிகழ்வினை மறவன்புலவு சச்சிதானம் அவர்களின் தலைமையிலான விழாக்குழுவினர் மற்றும் சங்கிலியன் மன்றத்தினர் இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தனர்.








