யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த உருவ பொம்மையை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் சுமந்திரன், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை என தெரிவித்த கருத்தையடுத்து, அவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்றைய தினம் சுமந்திரனின்உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு நல்லூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பொம்மையினை யாழ்ப்பாணம்பொலிஸார் அங்கிருந்து அகற்றியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here