மலையக ரயில் வீதியின் ஹாலிஎல மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 177, 4/3 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் இரண்டு பேர் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த விபத்தில் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் 21 வயதுயை இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2.20 மணியளவில் கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் மற்றும் யுவதி ஆகியோர் திடீரென ரயில் முன் குதித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ரயிலின் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here