த ஐலண்ட் பத்திரிகை ஊடகவியலாளர் ஸாக்கி ஜப்பார் நேற்றைய தினம் கொழும்பு – பெலவத்தயில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 60 வயதான ஸாக்கி ஜப்பார் தனியாக தனது வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பணிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உறவினர் ஒருவர் ஜப்பாரின் வீட்டிற்கு இன்று சென்ற போதே அவர் சடலமாக இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவரது இறப்பிற்கு காரணம் தெரியாத நிலையில், பல நாட்களுக்கு முன்பே ஸாக்கி ஜப்பார் உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.



