இலங்கையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தற்போது தகவல் கிடைத்து உள்ளது.
கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்டு, கடற்படை முகாமிலிருந்த 28 கடற்படையினருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து 1020 ஆக அதிகரித்துள்ளது .
இவ்வாறான சூழலில் இனி வரும் நாட்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தக்கூடிய நிலை காணப்படுகிறது .
அத்தோடு, நோயாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 414 நோயாளர்கள் வைத்திய சாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.



