PATHMA-GUNARATHNA-derana-news

கொழும்பில் டெல்டா பிறழ்வின் மற்றுமொரு பிறழ்வு பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 100 வீதம் டெல்டா வைரஸ் தாக்கமே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் பரவி வரும் டெல்டா மாறுப்பட்ட பிறழ்வானது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்

இலங்கையை செப்டம்பர் மாதம் 18ம் திகதி வரை மூடினால், சுமார் 7500 உயிர்களை காப்பாற்ற முடியும் என டொக்டர் பத்மா குணரத்ன குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி வரை நாட்டை மூடினால் மேலதிகமாக 10,000 உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்படும் பட்சத்தில் மாத்திரமே நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் டொக்டர் பத்மா குணரத்ன குறிப்பிடுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here