சுற்றுலா சென்ற இடத்தில் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பதுளை-கொஸ்லாந்தை மேல் தியலும் நீர்விழ்ச்சிப் பகுதியில் காணப்பட்ட நீர் நிறைந்த குழியில் குறித்த சிறுவன் விழுந்து உயிரிழிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் மரணத்தை கொஸ்லாந்தை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மாத்தறையில் இருந்து, ஒரு குழுவினர் குறித்த பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் சடலம் கொஸ்லாந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெற்றோர்களின் கவனயீனத்தால் இவ்வாறான உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



