தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெறும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,‘தமிழ் பேசும் மக்கள் வாக்குகளைப் பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும்.

தமிழ் மக்களுக்கான சரியான ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டிய சந்தர்ப்பத்தில் நாங்கள் இருக்கின்றோம். ஆகவே, இம்முறை எந்த அரசாங்கம் வந்தாலும் சேர்ந்து செயற்படத் தயார்.’ – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here