கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 774 ஆக அதிகரித்துள்ளது.ஏற்கனவே 771 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை கொழும்பில் நேற்று கொரோனா தொற்றுறுதியான 4 பேருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் விசேட புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டார். இன்றைய தினத்துக்குள் நோய்காவிகள் தொடர்பாக கருத்தை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



