நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி நோயாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்து தேசிய எஸ்.டி.டி / எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து 19-25 வயதுடைய ஆண்களின் எண்ணிக்கை தான் அதிகரித்து வருவததாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. 

வைத்தியர் ராசஞ்சலி ஹெட்டியாராச்சி, ஆண் நோயாளர்களின் எண்ணிக்கையில் படிப்படியான உயர்வு இருப்பதாக மேற்கோளிட்டு குறிப்பிட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த ஆண்டில் மட்டும் இலங்கையில் 3600 எச்.ஐ.வி நோயாளிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 
அத்தோடு,தேசிய எஸ்.டி.டி – எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு 2000 எச்.ஐ.வி நேர்மறை நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனால் மீதமுள்ள 1600 பேரும் சிகிச்சை பெறாமல் மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சமூகத்தின் மத்தியில் நடமாடி வருவதாகவும் வைத்தியர் ராசஞ்சலி ஹெட்டியாராச்சி மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here