மேஷராசி

இன்றைய நாளில் தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபராசி

இன்றைய நாளில் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மிதுனராசி

இன்றைய நாளில் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்த பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிம்மதியான நாள்.

கடகராசி

இன்றைய நாளில் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அனாவசிய பேச்சைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தால் பகை உண்டாகும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரியிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

சிம்மராசி

இன்றைய நாளில் எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

கன்னிராசி

இன்றைய நாளில் கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாராசி

இன்றைய நாளில் சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகராசி

இன்றைய நாளில் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசுராசி

இன்றைய நாளில் சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மகரராசி

இன்றைய நாளில் தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு .விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பராசி

இன்றைய நாளில் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனராசி

இன்றைய நாளில் குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்கள் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here