இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கான தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவானார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸிற்கு 5,093 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சொய்ஸாவுக்கு 2,707 வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



